திருப்போரூர்: சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து திருப்போரூர் அருகே உள்ள மருதேரி பகுதிக்கு இரவு நேரத்தில் அரசுப் பேருந்து (60 எம்) சென்றுகொண்டிருந்தது. ஓட்டுநர் செந்தில்குமாரும் நடத்துநர் கோபாலகிருஷ்ணனும் மருதேரி நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி விட்டு தூங்கினர். இரவு 1.15 மணி யளவில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூவர் கும்பல், ஒட்டுநர், நடத்துநரை தாக்கி டிக்கெட்டுடன் இருந்த பணப்பை, இரு கைபேசிகளைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதனைத் தடுக்க முயன்ற ஓட்டுநரின் தலை யில் கத்திவெட்டும் விழுந்தது. பணப்பையில் ரூ.8,500 ரொக்கம், 20,000 மதிப்புள்ள டிக்கெட்டுகள் இருந்தன. திருப்போரூர் காவலர்கள் விசாரிக்கின்றனர்.
ஓட்டுநரைத் தாக்கி பணப்பையை பறித்த கும்பல்
1 mins read
-

