100 பெண்களிடம் கணவர் அத்துமீறியதாக மனைவி புகார்

மதுரை: திரைப்­ப­டங்­களில் நடிப்ப தற்கு வாய்ப்பு தரு­வ­தா­கக் கூறி நூற்­றுக்­க­ணக்­கான பெண்­க­ளி­டம் என் கண­வர் அத்து மீறி நடந்து கொண்­டார். அதற்­கான ஆதாரங்­களும் என்­னி­டம் உள்­ள­தால், என் கண­வர் மீது உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று நந்­தினி என்­ப­வர் புகார் அளித்­துள்­ளார்.

சென்னை டிஜிபி அலு­வ­ல­கத்­தில், பாஜ­க­வின் விளை­யாட்டு மற்றும் திறன் மேம்­பாட்­டுப் பிரி­வில் மதுரை மாவட்ட புற­ந­கர்ச் செய­லாள­ராக உள்ள மோனேஷ் பாபு மீது விருது நகர் மாவட்­டம், அருப்­புக் கோட்­டை­யைச் சேர்ந்த அவ­ரது மனைவி நந்­தினி புகார் அளித்­துள்­ளார்.

புகா­ரில், 100க்கும் மேற்­பட்ட பெண்­களை ஏமாற்றி அவர்­களுக்குப் பாலி­யல் தொந்­த­ரவு அளித்த­தாக மோனேஷ் பாபு மீது நந்­தினி குற்­றம்­சாட்டி உள்­ளார்.

தங்கள் இருவர் இடையேயும் சமூக வலைத்­த­ளம் மூலம் பழக்­கம் ஏற்­பட்டு, கடந்த 2020ல் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­தாக நந்­தினி குறிப்­பிட்­டுள்­ளார்.

திரு­மங்­க­லத்­தில் வசித்து வந்த நிலை­யில், தம்மை சினிமா இயக்­கு­நர் என்று கூறிக்­கொண்டு பல பெண்­களை ஏமாற்றி பாலி­யல் ரீதி­யாக அத்­து­மீ­றி­ய­தாக மோனேஷ் பாபு மீது நந்­தினி பர­ப­ரப்பு குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார்.

தன்­னி­டம் இருந்த 52 சவ­ரன் நகை­யைப் பறித்துக்கொண்­டது தொடர்­பாக நந்­தினி அளித்த புகா­ரில் சில மாதங்­க­ளுக்கு முன்பு மோனேஷ் பாபு கைது செய்­யப்­பட்­டார். ஆனால், அர­சி­யல் செல்­வாக் கைப் பயன்­ப­டுத்தி அவர் வெளியே வந்­து­விட்­ட­தாக நந்­தினி குறிப்­பிட்டு உள்­ளார்.

பல ஆடி­யோக்­கள், காணொளி கள் ஆதாரங்களாக தன்­னி­டம் இருப்­ப­தாக நந்­தினி புகாரில் கூறி­யுள்­ளார். இந்­தப் புகாரை அடுத்து பாஜக நிர்­வாகி மோனேஷ் பாபு விரை­வில் கைதா­க­லாம் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!