மாணவி உயிரிழப்பு விவகாரம்; கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் 144 தடை உத்தரவு அமல் ‘மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும்’

சின்ன சேலம்: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறை தற்போது ஓய்ந்துள்ள நிலையில், "எனது மகள் ஸ்ரீமதியின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்," என்று உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி யில் நடந்த கலவரத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணமே தவிர மாணவர்கள் அமைப்பினர் காரண மல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து செய்தி யாளர்களிடம் செல்வி பேசியபோது, "அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் அடியாட்கள் மூலம் தாக்கி, பள்ளிக் கட்டடம், வாக னங்களை எரித்து, கல்வீசி கல வரத்தை ஏற்படுத்தி, தற்போது மாணவர்கள் மீது பழி சுமத்து கின்றனர். எனது மகளைத் திட்ட மிட்டு உயிரிழக்க வைத்தவர்களைத் தூக்கிலிட வேண்டும். மகள் இறப்புக்கு உரிய நீதி வேண்டும்," என்றார்.

இந்நிலையில், செய்தியாளர் களிடம் பேசிய காவல்துறைத் தலை வர் டிஜிபி சைலேந்திர பாபு, "மாண வியின் உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.

"இந்தச் சம்பவம் தொடர்பாக, சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் முதல்வர் சிவசங்கரன், தாளா ளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள னர்," என்று தெரிவித்தார்.

வன்முறை நிகழாமல் தடுப்பதற் காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையம் பகுதிகளில் இம்மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் பள்ளி சூறையாடப் பட்ட சம்பவத்தால், ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிப் படைந்துள்ளதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் கூறியது.

வன்முறையில் ஈடுபட்டதாக நேற்று காலை வரை 329 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிச் செயலர் சாந்தி ரவிக் குமார் முன்னதாக கூறியபோது, "ஸ்ரீமதி மரணத்தில் நாங்கள் எதை யும் மறைக்கவில்லை. மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் எனில், ஸ்ரீமதியின் கைபேசி, அவரது அம்மாவின் கைபேசியை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!