சென்னை: பாலியல் வன்கொடுமை காரணமாக கர்ப்பம் தரித்திருந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
தனி நீதிபதி அப்துல் குத்தூஸ் சிறுமியின் எதிர்காலம், வயது ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்கள் பரிந்துரைப்படி 28 வாரம், 3 நாட்களான கருவைக் கலைக்க அனுமதி அளித்துள்ளார். இதுபோல், 20 வாரங்களைத் தாண்டிய கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பதையும் நீதிபதி அப்துல் குத்தூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

