500 மனநோயாளிகளை ஆதரித்து, அரவணைக்கும் ஆர்வலர்

500 மனநோயாளிகளை ஆதரித்து, அரவணைக்கும் ஆர்வலர்

1 mins read
2c69ccf6-1329-4b1f-9e31-8a7314fc29a4
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குளிப்பட்டியில் ஆதரவற்றோரை மீட்டு அழைத்துச் செல்லும் நிஷார் சேட். படம்: தமிழக ஊடகம் -

ஒட்­டன்­சத்­தி­ரம்: சாலை­யில் மனம் போன போக்கில் சுற்­றித்­தி­ரி­யும் மன­நோ­யா­ளி­களை மீட்டு, அவர்­களுக்கு நிஷார் சேட் என்பவர் ஆத­ரவளித்து வரு­கி­றார்.

மக்கள் கூட்டம் அதிகமுள்ள நக­ரங்­களில் போக்­கு­வரத்தைச் சரிசெய்­வது, ஆத­ர­வற்­ற­வர்­களைக் கண்­டு­பி­டித்து, அவர்களை மன­நலக் காப்­ப­கங்­களில் அடைக்கல மாகச் சேர்ப்பது என கோவை மாவட்­டம், மேட்­டுப்பாளை­யத்­தைச் சேர்ந்­த நிஷார் சேட், 55, வாழ்ந்து வருகிறார்.

இவர் கடந்த 20 ஆண்டுகளுக்­கும் மேலாக தமி­ழ­கத்­தில் உள்ள அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் தனது இரு­சக்­கர வாக­னத்­தில் சென்று, சாலை­யோ­ரங்­களில் அழுக்கான ஆடைகளுடன் சுற்­றித்­தி­ரி­யும் மன­நோ­யா­ளி­களை மீட்டு, அவர்­க­ளின் தலை­மு­டியை மொட்டை அடித்து, குளிக்க வைத்து புத்தாடைகளை அணி­வித்து விடு­கிறார்.

இதன்­பி­றகு அவர்­களை மன நலக் காப்­ப­கத்­தில் சேர்த்து சிகிச்­சைக்கு ஏற்­பாடு செய்துவருகிறார். திரு­வ­னந்­த­பு­ரம், திருச்சி, ராமேஸ்­வ­ரம், ஏர்­வாடி, ஒட்­டன்­சத்­தி­ரம் உள்­ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்­பட்ட மனநோயா­ளி­களை மீட்டு, நல்வழிப்படுத்தி உள்ளார். "பல ஆண்­டு­களாக முழு­நே­ர­மாக இப்­ப­ணி­களைச் செய்து வரு­கி­றேன். இது எனக்கு மன­நி­றைை­வத் தரு­கிறது," என்­கி­றார் நிஷார் சேட்.