புதுடெல்லி: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடை பெறும் 44வது அனைத்துலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நேரில் சந்தித்து தமிழகக் குழுவினர் அழைப்பு விடுத்தனர்.
இந்த சதுரங்கப் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், 200 நாடுகளைச் சேர்ந்த 2,000 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரு கிறது. இந்தப் போட்டியை முன் னிட்டு, மாநிலம் முழுவதும் 'நம்ம செஸ், நம்ம பெருமை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்தப்பட்டு வருகின்றன.

