தோழியின் கருமுட்டையை விற்க முயன்ற தம்பதி கைது

திரு­வொற்­றி­யூர்: கண­வரை விட்­டுப் பிரிந்து தோழி­யின் வீட்­டில் அடைக்­க­ல­மான இளம்­பெண்­ணின் கரு­முட்­டையை விற்று பணம் சம்பா திக்க முயன்ற கண­வ­னும் மனைவி யும் கைது செய்­யப்­பட்­ட­னர். இவ் விவ­கா­ரம் தொடர்­பாக தமி­ழக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சென்னை எர்­ணா­வூ­ரைச் சேர்ந்­த­வர் விஜய். பெரும் ரவுடி. இவ­ரது மனைவி ஷ்ருதி, 22. இவர்­க­ளுக்கு இரண்டு வய­தில் ஒரு குழந்தை உள்­ளது.

இந்­நி­லை­யில், குடும்­பச் சண்டை கார­ண­மாக கண­வரை விட்­டுப் பிரிந்து சென்­றார் ஷ்ருதி. திரு வொற்­றி­யூ­ரில் வசிக்­கும் தனது தோழி ஐஸ்­வர்­யா­வின் வீட்­டில் அடைக்­க­லம் புகுந்­தார்.

ஐஸ்­வர்­யா­வும் அவ­ரது கண­வர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்­ணா­வும் தொடக்­கத்­தில் ஷ்ரு­தியை நல்ல முறை­யில் கவ­னித்­துக்கொண்­ட­னர். ஆனால், நாள்­கள் செல்லச் செல்ல ஒரு வேலைக்­கா­ரி­யைப் போல் கொடு­மைப்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஷ்ரு­தி­யி­டம் "கரு­முட்­டையை விற்­றால் ரூ.20,000 வரை கிடைக்­கும்," என்று கூறி தாம்பரத்­தில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­மனைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். அங்கு சென்று விசா­ரித்­த­போது கரு­முட்டை பெற ரூ.40,000 வரை பணம் தரு­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

கடைசி நேரத்­தில் தனது மனதை மாற்­றிக்­கொண்ட ஷ்ருதி, கரு­முட்டை கொடுக்­க­மாட்­டேன் என்று சண்டை போட்­டுள்­ளார்.

இத­னால், மீண்­டும் அவரை வீட்­டுக்கு அழைத்து வந்து, அடித்து உதைத்து துன்­பு­றுத்தி உள்­ள­னர். இதைப்­பற்றி சிறை­யில் இருந்து பிணை­யில் வெளியே வந்­துள்ள தனது கண­வர் விஜய்க்கு ஷ்ருதி குறுஞ்­செய்தி அனுப்­பி­னார். அவர் திரு­வொற்­றி­யூர் காவல் நிலை யத்­தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து தம்பதி கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!