மாணவி உயிரிழந்த விவகாரம்: பள்ளி மூடப்பட்டது குறித்து முதல்வர் ஆலோசனை 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

மாணவி உயிரிழந்த விவகாரம்: பள்ளி மூடப்பட்டது குறித்து முதல்வர் ஆலோசனை 4,000 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

2 mins read
bf2bb62f-fdff-4580-b875-ccacf1dd8dc0
-

சென்னை: கள்­ளக்­கு­றிச்­சி­யில் உள்ள தனி­யார் பள்­ளி­யில் படித்து வந்த 4,000 மாணவ, மாண­வி­களின் எதிர்­கா­லம் கேள்­விக்­குறி ஆகியுள்­ள­தால், இந்த விவ­கா­ரம் தொடர்­பாக, முதல்­வர் மு.க.ஸ்டா­லின் காணொ­ளி வழி அமைச்­சர்­கள், அதிகாரி­க­ளு­டன் நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

கள்­ளக்­கு­றிச்­சி­யில் 'பிளஸ் 2' மாணவி ஸ்ரீமதி மர­ணத்­துக்கு நீதி கேட்டு நடந்த போராட்­டம் கல வரத்­தில் முடிந்­தது.

இந்­தக் கல­வ­ரம் தொடர்­பாக 20 சிறு­வர்­கள், இரு பெண்­கள் உட்பட ஏறக்­கு­றைய 400 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கனி­யா­மூ­ரில் உள்ள சக்தி மெட்­ரிக் மேல்­நி­லைப் பள்­ளிக் கட்­ட­டம் கல­வ­ரத்­தில் முற்றி லும் சீர்­கு­லைந்து போனது.

இந்­தப் பள்­ளி­யைச் சீர­மைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரு வதும் இப்­போது இய­லாத காரி­யம் என்று கூறப்­ப­டு­கிறது.

இந்­தச் சூழ­லில், இப்­பள்­ளி­யில் படித்த 4,000 மாண­வர்­க­ளின் எதிர் காலம் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது.

இதை­ய­டுத்து, பள்ளி எந்த அள­வுக்குச் சேதம் அடைந்­துள்­ளது, பள்­ளிக்­கூ­டத்தை மீண்­டும் இயங்க வைப்­பது எவ்­வாறு என்பது குறித்து நேற்று முதல்­வர் ஆலோ­சித்­தார்.

தனி­யார் பள்­ளி­யில் படித்து வந்த மாண­வர்­க­ளுக்குச் செய்­யப்­பட உள்ள மாற்று ஏற்­பா­டு­கள் குறித்­தும் அடுத்தகட்ட நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் விவா­திக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, மாணவியின் மர­ணம் தொடர்­பாக பள்­ளித் தாளா­ளர் ரவிக்­கு­மார், 48, செய­லா­ள­ரும் தாளா­ள­ரின் மனைவியுமான சாந்தி ரவிக்­கு­மார், 44, பள்ளி முதல்­வர் சிவ­சங்­க­ரன், 57, ஆசி­ரி­யை­கள் ஹரிப்­பி­ரியா, 40, கிருத்­திகா, 28, ஆகி­யோர் கைதாகி உள்­ள­னர்.

கள்­ளக்­கு­றிச்சி குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்ற நீதி­பதி முகம்­மது அலி முன்பு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட இவர்கள் ஐவரை­யும் ஆகஸ்ட் 1ஆம் தேதி­வரை சேலம் மத்­திய சிறை­யில் அடைக்க நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

அத்­து­டன், கல­வ­ரம் தொடர்­பாக கைதான 220 பேர் நீதிமன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் ேததி வரை திருச்சி மத்­திய சிறை­யில் அடைக்கப்­பட்­ட­னர்.

தனி­யார் பள்ளி சூறை­யா­டப் பட்­ட­தால் ரூ.50 கோடி அள­வுக்கு நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ள­தாக தனி­யார் பள்­ளி­கள் சங்க மாநி­லச் செய­லர் நந்­த­கு­மார் ஏற்கெனவே ெதரி­வித்திருந்தார்.

இந்நிலையில், மாண­வர்­க­ளின் பெயரில் சமூக விரோ­தி­கள் வன்­முறையில் ஈடு­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் எ.வ.வேலு குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.நீதி கேட்டு போராட்டம் நடத்திய வர்கள் நீதி தவறியது சரியா என் றும் அவர் கேட்டுள்ளார்.

பெற்றோர் தரப்பில் யாருமின்றி மாணவியின் உடல் மறுகூராய்வு நேற்று தொடங்கியது.

பள்ளியைச் சூறையாடி, சேதப்படுத்திய 220 பேரை இரு கட்டங்களாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவலர்கள் அழைத்து வந்தனர். படம்: இந்து தமிழ்திசை