புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் அதிபர் ராம்நாத் கோவிந்தால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறை களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த நியமன எம்.பி. பதவி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற மேலவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் நியமன எம்பிக்களும் பதவியேற்றுக்கொண்ட நிலையில், தமிழகத்தில் இருந்து தேர்வான நியமன எம்பிக்கள் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் பதவியேற்க வரவில்லை.
'இளையராஜா' என அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூப்பிட்டதும், அவையில் இருந்த அனைத்து எம்பிக்களும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், இளையராஜா பதவி யேற்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இளையராஜா அமெரிக்கா சென்றுள்ளதால் அவரால் பதவியேற்க இயலவில்லை என்றும் வரும் நாள்களில் இளையராஜாவும் பி.டி.உஷாவும் பதவியேற்றுக் கொள்வார்கள் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து தேர்வான திமுக எம்பிக்கள் ராஜேஷ் குமார், கல்யாண சுந்தரம், கிரிராஜன், அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் ஆகி யோரும் பதவிேயற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

