ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தை அடுத்த குப்பன்துறை கிராமத்தில் நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நாடகக் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
மழை ெபய்ய வேண்டி ஊரில் 17ஆம் தேதி இரவு இரண்யா என்ற நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது நாரதர் வேடமிட்டு அதே ஊரைச் சேர்ந்த நாடகக் கலைஞர் ராஜய்யன், 62, அதிகாலை 3 மணியளவில் ஆடிப்பாடி, மிகவும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக கலைஞர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

