ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை

ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை

2 mins read
5bb49e0c-687e-45cc-8ddc-905a00aa2f90
-

மதுரை: வரி ஏய்ப்பு புகா­ரின் பேரில் அரசு ஒப்­பந்­த­தா­ரர்­கள் இரு­பது பேரின் வீடு­கள், அலு­வ­ல­கங்­களில் வரு­மான வரித்­து­றை­யி­னர் நேற்று அதி­ரடிச் சோதனை மேற்­கொண்­ட­னர்.

மதுரை, திண்­டுக்­கல் ஆகிய இடங்­களில் இந்­தச் சோதனை நடை­பெற்­ற­தா­க­வும் சம்­பந்­தப்­பட்ட ஒப்­பந்­த­தா­ரர்­கள் பல ஆண்­டு­க­ளாக தங்­க­ளு­டைய வரு­மான வரிக் கணக்­கு­களை முறைப்­படி தாக்­கல் செய்­ய­வில்லை என்­றும் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

வரு­மான வரித்­து­றை­யின் நேர­டிக் கண்­கா­ணிப்­பின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ள இரு­பது பேரும் மதுரை, திண்­டுக்­கல் மாவட்­டங்­களில் மேற்­கொள்­ளப்­படும் நூற்­றுக்­கும் மேற்­பட்ட தமி­ழக அர­சின் பணி­களை செயல்­ப­டுத்தி வரும் முதல்­நிலை அரசு ஒப்­பந்­த­தா­ரர்­கள் ஆவர். பல கோடி ரூபாய் மதிப்­பி­லான வளர்ச்­சிப் பணி­கள், பொதுப்­ப­ணித்­துறை, நெடுஞ்­சாலைத்­துறை சார்ந்த பணி­க­ளைச் செய்து வரு­கின்­ற­னர்.

இந்­தப் பணி­க­ளுக்­காக அரசு நிர்­ண­யிக்­கும் திட்ட மதிப்­பீட்­டில் குறிப்­பிட்ட தொகையை இந்த ஒப்­பந்­த­தா­ரர்­கள் வரு­மான வரி­யா­கச் செலுத்த வேண்­டும் என்­பது விதி­முறை. எனி­னும் முதல்­நிலை ஒப்­பந்­த­தா­ரர்­கள் அதை மீறி­உள்ள­னர். இவர்­களில் சிலர் பல ஆண்­டு­க­ளாக வரு­மான வரி செலுத்­த­வில்லை என்­றும் சிலர் பல்­வேறு தக­வல்­களை மறைத்து, மிகக் குறை­வான தொகையை வரி­யா­கச் செலுத்தி உள்­ள­னர் என்­றும் புகார் எழுந்­துள்­ளது.

இவர்­க­ளு­டன் தொடர்­பு­டைய சில நிறு­வ­னங்­கள் வரி செலுத்­த­வில்லை என்­ப­து­டன், போலி­யாக கணக்கு விவ­ரங்­க­ளைக் காண்­பித்து, வரு­மான வரிச்­ச­லுகை பெற்­றுள்­ள­னர் என்­றும் வரு­மா­ன­வ­ரித்­துறை சாடி­யுள்­ளது.

கடந்த சில ஆண்­டு­களில் இந்த ஒப்­பந்­த­தா­ரர்­கள் பல்­வேறு வகை­யி­லும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­ததை அடுத்து, வரு­மான வரித்­து­றை­யி­னர் அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அண்­மை­யில், விரு­து­ந­கர் மாவட்­டம், அருப்­புக்­கோட்­டையைச் சேர்ந்த முதல்­நிலை அரசு ஒப்­பந்­த­தா­ரர் ஒரு­வ­ரது வீடு, அலு­வ­ல­கங்­களில் நடத்­தப்­பட்ட சோத­னை­யின்­போது பல கோடி மதிப்­புள்ள ரொக்­கப் பணம், சொத்து ஆவ­ணங்­கள் ஆகிவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. பின்­னர் அவ­ரு­டன் தொடர்­புள்ள நிறு­வ­னங்­க­ளி­லும் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதற்­கி­டையே, அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­யாக நேற்று காலை முதல் மாலை வரை மதுரை, திண்­டுக்­கல் மாவட்­டங்­களில் மேற்­கு­றிப்­பிட்ட அரசு ஒப்­பந்­த­தா­ரர்­க­ளு­டன் தொடர்­பு­டைய இடங்­களிலும் அதேபோன்ற சோதனை நடத்­தப்­பட்­டது. இதில் அறு­ப­துக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர்.

நேற்று மாலை வரை நீடித்த சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­கள், ரொக்­கப்­பணம் ஆகி­யவை கைப்­பற்­றப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. தேவைப்­பட்­டால் சில இடங்­களில் இன்­றும் சோதனை நீடிக்­கும் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஒப்­பந்­த­தா­ரர்­க­ளி­டம் இருந்து கைப்­பற்­றப்­பட்ட பொருள்­கள், ஆவ­ணங்­கள் குறித்து அதி­கா­ர­பூர்­வ­மாக பின்னர் அறி­விக்­கப்­படும் என வரு­மான வரித்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னால் தமி­ழக அர­சின் பல்­வேறு பணி­களை ஒப்­பந்­தப் புள்­ளி­கள் மூலம் பெற்­றுச் செயல்­ப­டுத்தி வரும் ஒப்­பந்­த­தா­ரர்­கள் கடும் அதிர்ச்சி அடைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மதுரை, திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்கள்; கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு எனப் புகார்