குட்கா: முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

குட்கா: முன்னாள் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு

1 mins read
119d582b-e37b-458b-845b-d0cae2123eae
முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வீடு. கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் தடை செய்­யப்­பட்­டுள்ள போதை பாக்­கு­கள் உள்­ளிட்ட குட்கா பொருள்­களை முறை­கே­டாக விநி­யோ­கித்­தது, விற்­பனை செய்­தது தொடர்­பாக முன்­னாள் அமைச்­சர்­கள், காவல்­துறை அதி­கா­ரி­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்ய சிபிஐ முடிவு செய்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்­தில் பல­கோடி ரூபாய் லஞ்­சத்­தொ­கை­யாக கைமாறி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது தொடர்­பாக தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்­புக்கு கடி­தம் எழு­தி­யுள்ள சிபிஐ, சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது வழக்­குப்­பதிவு செய்ய அனு­மதி கோரி­யுள்­ளது. குட்கா ஊழல் வழக்­கில் தொழி­ல­தி­பர் மாத­வ­ராவ், மூன்று அரசு அதி­கா­ரி­கள் உள்­ளிட்ட ஆறு பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.

ஆறு பேர் மீதும் சிபிஐ அதி­கா­ரி­கள் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­துள்ள நிலை­யில், குட்கா வழக்கு மீண்­டும் சூடு­பி­டித்­துள்­ளது.

குற்­ற­வா­ளி­கள் மீது மேலும் ஒரு குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­படும் என சிபிஐ வட்­டா­ரங்­கள் கூறுகின்றன.

இந்நிலை­யில், இந்த வழக்கு தொடர்­பாக அதி­முக முன்­னாள் அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர், முன்­னாள் வணிக வரித்­துறை அமைச்­சர் ரமணா, காவல்­துறை முன்­னாள் டிஜி­பிக்­கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்தி­ரன் உள்­ளிட்ட சில அதி­கா­ரி­க­ளுக்கும் சிக்­கல் எழுந்­துள்­ளது.

அண்­மை­யில் இவர்களுடைய வீடு­களில் சிபிஐ தரப்பு அதி­ரடிச் சோதனை நடத்­தி­யது. அதன் தொடர்ச்சியாக தற்­போது இவர்­கள் மீது வழக்­குப்­ப­திவு செய்ய சிபிஐ முடிவு செய்­துள்­ளது.

தமி­ழக அரசு இதற்கு அனு­மதி அளிக்­கும் பட்­சத்­தில், உட­ன­டி­யாக விசா­ர­ணையை தீவி­ரப்­ப­டுத்த சிபிஐ திட்­ட­மிட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.