தமிழ்த் தாள்: ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

சென்னை: ஆசி­ரி­யர் தேர்வு வாரி­ய­மா­னது தமி­ழ­கத்­தில் உள்ள அர­சுப் பள்­ளி­கள், கல்­லுாரி­களில், ஆசி­ரி­யர் பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான போட்டி தேர்­வு­களை நடத்­து­கிறது.

இது­வரை தமிழ் மொழி தெரி­யா­த­வர்­களும் இத்­தேர்­வு­களை எழுதி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், தமி­ழ­கத்­தில் வசிக்­கும் தமிழ் தெரிந்­த­வர்­கள் மட்­டுமே, தமி­ழ­கப் பள்ளி, கல்­லூரி­களில் ஆசி­ரி­யர்­க­ளாக பணி­யாற்­றும் வகை­யில் தேர்வு நடத்­தும் முறை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்ய வேண்­டும் என்று மொழி ஆர்­வ­லர்­கள் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆசி­ரி­யர் தேர்வு வாரி­யம் நடத்­தும் தேர்­வு­களில் தமிழ் கட்­டாய தாளை அறி­மு­கம் செய்ய பள்­ளிக்­கல்­வித் துறை முடிவு செய்­துள்­ளது.

ஏற்­கெ­னவே தமிழ்­நாடு அரசு பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் நடத்­தும் தேர்­வு­களில் தமிழ்த் தாள் என்­பது கட்­டா­ய­மாக உள்­ளது. தற்­போது ஆசி­ரி­யர் தேர்வு வாரி­ய­மும் அதே நடை­

மு­றை­யைப் பின்­பற்ற உள்­ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் முடிவு வரவேற்கத்தகுந்தது என்றும் உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!