அதிமுக அலுவலகத்தில் வெள்ளி வேல், செங்கோல்கள் திருட்டு

2 mins read
447307a0-596a-4bff-9b71-c5000a30251b
-

சென்னை: அதி­முக தலைமை அலு வல­கத்­தில் ஜெய­ல­லி­தா­வின் நினை­வுப் பொருள்­க­ளாக இருந்த வெள்ளி வேல், செங்­கோல்­கள் உள்­ளிட்ட விலை உயர்ந்த பரி­சுப் பொருள்­கள் மாய­மா­கி­விட்­ட­தாக முன்­னாள் அமைச்­சர் சி.வி.சண்­முகம் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

"சென்னை வான­க­ரத்­தில் இம்­மா­தம் 11ஆம் தேதி அதி­முக பொதுக்­கு­ழுக் கூட்­டம் நடைபெற்­றது. அப்­போது மூண்ட கல­வ­ரத்­தில் இந்த அலு­வ­ல­கத்­தின் இரண்­டா­வது மாடி­யில் இருந்த முக்­கி­ய­மான பரி­சுப்­பொ­ருள்­களும் விலை உயர்ந்த பொருள்களும் காணா­மல் போயுள்­ளன. அலு­வ­ல­கத்­தில் இரும்பு அல­மாரி உடைக்­கப்­பட்டு அதில் வைக்­கப்­பட்­டி­ருந்த நினை­வுப் பரி­சு­கள் மாய­மாகி உள்­ளன. காணா­மல் போன பொருள்­கள் அனைத்­தும் மறைந்த முதல்­வர் ஜெய­ல­லி­தா­வுக்கு நினை­வுப் பரிசு­ க­ளா­கக் கொடுக்­கப்­பட்­டவை," என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சி.வி.சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே, கல­வ­ரம் கார­ண­மாக 'சீல்' வைக்­கப்­பட்­டி­ருந்த அலு­வ­ல­கத்தை திறக்க அனு­ம­தித்து, தலைமை அலு­வ­ல­கத்­தின் சாவியை உட­ன­டி­யாக எடப்­பாடி பழ­னி­சாமி யிடம் ஒப்­ப­டைக்­கும்­படி உயர் நீதிமன்றம் உத்­த­ர­விட்டது.

அதன்­படி, நேற்று வட்­டாட்­சி­யர், கோட்­டாட்­சி­யர் தலை­மை­யில் அதி­முக அலு­வ­ல­கத்­தின் 'சீல்' உடைத்து திறக்­கப்­பட்­டது. அப்­போது, பொருள்­கள் காணா­மல் போனது தெரி­ய­வந்­தது. இதுகுறித்து எடப்­பாடி பழ­னி­சா­மி­யி­டம் தெரி­விக்­கப்­பட்டு அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் மேல்முறையீடு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது இபிஎஸ் தரப்புக்கு கொண்டாட்டத்தை யும் ஓபிஎஸ் தரப்புக்கு பலத்த அடியையும் தந்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்ய உள்ளார். "கட்சி அலுவலகம் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனி நீதிபதிக்கு இல்லை. எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய் யப்படும்," என ஓபிஎஸ் வழக் கறிஞர் திருமாறன் கூறினார்.