'ஃபோர்ட்' நிறுவனத்தின் கடைசி காருக்கு பிரியா விடைகொடுத்த ஊழியர்கள்

'ஃபோர்ட்' நிறுவனத்தின் கடைசி காருக்கு பிரியா விடைகொடுத்த ஊழியர்கள்

1 mins read
90b1abe8-c27e-4b2e-a736-46d4bf14f94f
-

மறைமலை நகரில் இயங்கிவரும் 'ஃபோர்ட்' கார் உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடைசி காருக்கு ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

இந்தியாவில் 'ஃபோர்ட்' கார் உற்பத்தி தொழிற்சாலைகள் அகமதாபாத், சென்னை ஆகிய இரு நகரங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன. அவற்றில், நிதி நெருக்கடி, நஷ்டம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் 'ஃபோர்ட்' கார் உற்பத்தி தொழிற்சாலை இம்மாதம் 31ஆம் தேதியுடன் மூடப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு தயாரிக்கப்பட்ட கடைசி காரான 'எகோஸ்போர்ட் எஸ்யுவி' காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீருடன் விற்பனைக்கு அனுப்பிவைத்தனர்.

26 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலை ஆண்டிற்கு 444,000 கார்களை உற்பத்தி செய்து வந்ததாகத் தகவல். படம்: ஊடகம்