கள்ளக்குறிச்சி: 17 வயது பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் புகுந்து நாற்காலி, மேசை, குளிர் சாதன இயந்திரங்கள், கணினி, மின் விசிறி உள்ளிட்ட பொருள்களைச் சூறையாடிச் சென்றனர்.
அத்துடன், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றையும் ஓட்டிச்சென்றனர்.
இவ்வாறு எடுத்துச்சென்ற பொருள்களை எல்லாம் திரும்பக் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று தண்டோரா போட்டு கிராம மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
"கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் எடுத்த பொருள்களை எல்லாம் எடுத்த இடத்திேலயே வைத்துவிடுங்கள், இல்லாவிடில் காவலர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்," என்று சின்னசேலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தண்டோரா மூலம் காவலர் ஒருவர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பள்ளியின் பொருள்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்கு பாயும் என்றும் அவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசா ரணைக்கு உள்ளாக்கப்பட்டு தண்ட னைக்கு ஆளாவார்கள் என்றும் தண்டோரா மூலமாக காவலர் எச்சரித்து வருகிறார்.
பள்ளியில் சூறையாடிய பொருள்களை எடுத்த இடத்திேலயே வைத்துவிடுங்கள். இல்லாவிடில்
உங்கள் மீதும் நடவடிக்கை பாயும்.
தண்டோரா போட்டு
எச்சரித்த காவலர்

