25 இடங்களில் சோதனை; முக்கிய ஆவணம் பறிமுதல்

25 இடங்களில் சோதனை; முக்கிய ஆவணம் பறிமுதல்

2 mins read
8357fa1d-c3a5-49a8-ba7b-4990e5e5edb2
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் விசாரணை நடத்திவிட்டு, வெளியே வந்த என்ஐஏ அதிகாரிகள். படம்: தினத்தந்தி ஊடகம் -

திருச்சி: சென்னை, திருச்சி, திருப்­பூர் உள்­ளிட்ட 25 இடங்­களில் தேசிய புல­னாய்வு முகவை (என்­ஐஏ) அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் 57 கைபே­சி­கள், 68 சிம்­கார்­டு­கள், கட­வுச்­சீட்­டு­கள், முக்­கிய ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன.

கேரள மாநி­லம், விழிஞ்­சி­யம் துறை­மு­கத்­தில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெரா­யின், 1,000 துப்­பாக்கி தோட்­டாக்­கள், 5 ஏ.கே. 47 ரக துப்­பாக்­கி­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வத்­தில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த சிலருக்­கும் தொடர்­பி­ருப்­பது தெரியவந்­தது.

இதை­ய­டுத்து, தமி­ழ­கத் தலை நகர் சென்னை, திருச்சி உள்­ளிட்ட 22 இடங்­களில் என்­ஐஏ அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

திருச்சி மத்­திய சிறை வளா­கத்­தில் உள்ள வெளி­நாட்­டுக் கைதி களுக்­கான சிறப்பு முகா­மில் அடைக்­கப்­பட்­டுள்ள இலங்­கை­யைச் சேர்ந்த 15 பேரி­டம் 13 மணி நேரம் விசா­ரணை நடந்­தது.

முகா­மில் உள்ள குணா என்­ப­வ­ரின் கார் ஓட்­டு­ந­ராக இருந்த விக் ேனஷ் வீட்­டி­லும் இச்­சோ­தனை நடை­பெற்­றது.

இலங்கை போதைப்­பொ­ருள் கும்­ப­லின் முக்­கிய புள்­ளி­க­ளான குண­சே­க­ரன், புஷ்­ப­ராஜா ஆகி­யோர் பாகிஸ்தா­னைச் சேர்ந்த ஹாஜி சலீ­மு­டன் சேர்ந்து போதைப்­பொருள், ஆயு­தங்­களை அந்­நாட்­டில் இருந்து இந்­தியா, இலங்­கைக்கு கடத்­தி­ய­தாக விசா­ர­ணை­யின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தமி­ழ­கத்­தில் என்­ஐஏ அதி­காரி கள் நடத்­திய சோத­னை­யில், 57 கைபே­சி­கள், 68 சிம் கார்­டு­கள், இரு மடிக்­க­ணி­னி­கள், பணப்­ப­ரி­வர்த்­த­னைக்­கான ஆவ­ணங்­கள், இலங்கை கட­வுச்­சீட்­டு­கள் உள்­ளிட்­டவை அதி­கா­ரி­க­ளால் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

திருச்சி சிறப்பு முகா­மில் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் ரூ.252,000 ரொக்­கம், 57 சவரன் தங்க நகை­கள், முக்­கிய ஆவ­ணங்­களை அதி­காரிகள் பறி­மு­தல் செய்­த­னர்.

கைப்­பற்­றப்­பட்ட ஆவ­ணங்­களை ஆய்வு செய்து, அடுத்­த­கட்ட நட­வடிக்கை எடுக்­கப்­படும் என என்­ஐஏ தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, இந்தச் சோதனை பரபரப்பு அடங்குவதற்­குள் அம­லாக்­கத்­து­றையைச் சேர்ந்த 4 டெல்லி அதி­கா­ரி­கள் திருச்சி மத்­திய சிறை வளா­கத்­தில் அமைந்­துள்ள சிறப்பு முகா­மிற்­குள் அதி­ர­டி­யாகச் சென்று நேற்று சோதனை நடத்தினர். வெளி­நாட்­டி­ன­ரின் சட்­ட­வி­ரோத பணப் பரி­வர்த்­தனை தொடர்­பாக விசா­ரணை நடந்ததாகத் தகவல்.