இலவசமாக கல்வி கற்பிக்கும் காவல் அதிகாரி ரஞ்சித்

இலவசமாக கல்வி கற்பிக்கும் காவல் அதிகாரி ரஞ்சித்

1 mins read
c408121c-4a0d-45a6-b02c-1336b5d67ed7
ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் காவல் ஆணையர் ரஞ்சித். படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியாவில் பணியாற்றி வருகிறார் காவல் ஆணையர் ரஞ்சித். இவர், ஏழ்மை நிலையில் பிச்சை எடுப்பவர்களின் குழந்தை களுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார்.

"நான் இந்தப் பகுதியில் சொந்தமாகப் பள்ளியைத் தொடங்கி, எனக்கு விடுமுறை கிடைக்கும் நேரங்களில் எல்லாம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறேன்.

"இங்கு படிக்கும் குழந்தை களின் பெற்றோர் பிச்சை எடுப் பதை நான் அடிக்கடி நேரில் பார்த்துள்ளேன். இக்குழந்தை களின் வாழ்வை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிவெடுத்து கல்வி கற்பித்து வருகிறேன். நாங்கள் இங்கு படித்து முடித்துவிட்டு, மேல் படிப்பு படிக்க விரும்புகிறோம். இங்கு படிக்கும்போது நாங்கள் நன்றாக கல்வி கற்பதாக உணர் கிறோம் என மாணவர்கள் கூறு கின்றனர்," என்கிறார் ரஞ்சித்.