எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
68821e8a-1502-4912-84e0-68b0582c1e44
-

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராகச் செயல்பட தடைவிதிக்கக் கோரிய வழக்கு தொடர்பில், அதி­முக மற்றும் எடப்பாடி பழனி­சாமியின் தரப்­பில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்­குள் பதி­ல­ளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வான­க­ரத்­தில் இம்­மா­தம் 11ஆம் தேதி நடந்த பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில், அக்­கட்­சி­யின் இடைக்­கா­லப் பொதுச் செயலாள­ராக பழ­னி­சாமி நிய­மிக்கப்­பட்­டார்.

இதனை எதிர்த்து, திண்­டுக் கல்­லைச் சேர்ந்த அதி­முக உறுப்­பி­னர் சூரி­ய­மூர்த்தி, உரி­மை­யி­யல் நீதி­மன்­றத்­தில் வழக்குத் தொடர்ந்­துள்­ளார். அதி­முகவின் அடிப்­படை விதி­களை மீறி இடைக்­காலப் பொதுச் செய­லா­ள­ராக பழ­னி­சாமி தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் இப்­ப­த­வி­யில் செயல்­பட தடை விதிக்­க­வேண்­டும் என்­றும் பொதுக்­கு­ழு­வில் ஒற்­றைத் தலை­மையை உரு­வாக்­கும் வகை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை ரத்து செய்ய வேண்­டும் என்­றும் மனு­வில் கோரியுள்ளார்.