சென்னை: மின் கட்டணம், ஆவின் பால் பொருள்களின் விலையை திமுக அரசு உயர்த்தி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண் ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
"திமுக ஆட்சிக்கு வந்தபிறகு செய்துள்ள ஒரே சாதனை என்றால், அனைத்துவிதமான பொருள்களின் விலையையும் உயர்த்தி உள்ளதைத் தான் கூறவேண்டும்.
"மின்கட்டணம், சொத்துவரி, ஆவின் பால் பொருள்களின் விலையை உயர்த்தி உள்ளனர். குறிப்பாக, அனைத்துப் பொருள் களின் விலையையும் 20 விழுக்காடு வரை உயர்த்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது," என்றும் அவர் கூறியுள்ளார்.

