மருமகனை மன்னித்த மாமியார்; 10 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

மருமகனை மன்னித்த மாமியார்; 10 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

2 mins read
0e1807d6-b773-44a4-b39b-3101f3733719
-

சேலம்: கொடுத்த கட­னைக் கேட்ட­தால் தன்னை அரி­வாள்மனை­யால் தாக்கி காயம் ஏற்­ப­டுத்­திய தனது மரு­ம­கனைத் தான் மன­தார மன்­னித்­து­விட்­ட­தாக மாமி­யார் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இச்சூழலில், "உயர் நீதி மன்றத் துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிக்கு கீழ்நீதி மன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்துசெய்து, அவரை விடுதலை செய்கிறேன்," என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

சேலம் ஆத்­தூ­ரைச் சேர்ந்­த­வர் சுப்­பி­ர­மணி. இவ­ருக்கு மூன்று குழந்­தை­கள் உள்­ள­னர்.

கடந்த 2017 டிசம்­பர் மாதத்தின் ஒருநாளில், தான் வாங்­கிய கட­னைத் திரும்­பச் செலுத்­து­வ­து குறித்து சுப்பிரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தக­ராறு ஏற்­பட, கடும் கோப­மடைந்த சுப்­பி­ர­மணி வீட்­டிலிருந்த அரிவாள்­ம­னையை எடுத்து தனது மாமியாரின் முது­கில் வெட்­டி­த் தாக்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், சேலம் மக­ளிர் நீதி­மன்­றம் சுப்­பி­ர­மணிக்கு 10 ஆண்­டு­கள் கடுங்­கா­வல் சிறைத்தண்­டனை விதித்து கடந்த மே மாதம் தீர்ப்­ப­ளித்­தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்­பி­ர­மணி சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மேல்முறை­யீடு செய்­தார்.

இவ்வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் சுப்பிரமணியின் மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் என அனை வரும் முன்னிலையாகினர்.

"எனது மகள் மரு­ம­க­னு­டன் வாழவேண்­டும். நானும் என் மரு­மகனை மன்­னித்துவிட்டதால் மரு மகனை விடுதலை செய்யுங்கள்," என மனு­தா­ர­ரின் மாமியார் நீதி மன்றத்தில் கூறினார். இதுகுறித்து மனுவும் தாக்கல் செய்தார்.

ஒருவருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்ட பின்னரும் குடும்­பப் பிரச்சி­னை­யில் உயர் நீதி­மன்­றம் தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­ப­தால், மனு­தா­ரரை விடு­தலை செய்­வ­தாக நீதிபதி தீர்ப்­ப­ளித்­தார்.

எனது மகள், மருமகனுடன் சேர்ந்து வாழவேண்டும். மூன்று குழந்தைகளையும் வளர்க்கவேண்டும் என்பது முக்கியம். நானும் மருமகனும் சமாதானம் ஆகிவிட்டோம். எனது மருமகனை நான் மன்னித்துவிட்டேன்.

மருமகனை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்த மாமியார்