கேரளாபோல் டாக்சி சேவை வழங்க யோசனை

கேரளாபோல் டாக்சி சேவை வழங்க யோசனை

1 mins read
21e3cd25-b773-4e3c-bc97-b5a3bb303195
-

சென்னை: பொதுமக்கள் நியாயமான கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதையும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு நியாயமான லாபம் கிடைப்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

கேரள மாநில அரசு 'கேரளா சவாரி' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது பாராட்டத்தக்கது. அதிகக் கட்டணம் வசூலிக்கும் டாக்சி சேவை நிறுவனங்களிடம் இருந்து இது மக்களைப் பாதுகாக்கும் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழகத்திலும் இதே போன்ற செயலி உரு வாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.