படகில் சென்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

படகில் சென்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

1 mins read
1edfe739-926c-401d-8694-88623fa2d6f2
எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50 ஃபைபர் படகுகளில் சென்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படம்: ஊடகம் -

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் சாரம் கொண்டு செல்வதற்காக கடலும் ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இக்கோபுரங்கள் அமைக்கப் பட்டால் அப்பகுதியில் மீன்பிடிக்கும் எட்டு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 20,000 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினை கள் ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும்‌ மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில் அதிமுகவினர் உயர்மின் அழுத்தக் கோபுரம் கட்டுவதைக் கண்டித்து 50க்கும் மேற்பட்ட ஃபைபர் படகு களில் மீனவர்களுடன் சென்று கோபுரம் கட்டப்படும் முகத்துவாரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.