கள்ளக்குறிச்சி: இரண்டு உடற்கூராய்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த ஒன்பது நாள்களாக பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், இன்று மாலைக்குள் மாணவியின் இறுதிச் சடங்கை நடத்தி முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருள்களைத் திரும்ப ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவலர்கள் எச்சரித்திருந்ததால், எடுத்துச்சென்ற பொருள்களை சாலை ஓரங்களில் மக்கள் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருள்களைச் சாலை ஓரங்களில் பொதுமக்கள் போட்டு விட்டுச் சென்றனர். இதனால், கனியாமூர் பகுதியில் மேசைகள், நாற்காலிகள், எரிவாயு உருளைகள், சமையல் பாத்திரங்கள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன. படம்: ஊடகம்

