விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத் தில் தனது சொந்தத் தொகுதியில் வசிக்கும் மக்களே உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை தங்களது கிராமத்துக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இங்குள்ள, டி எடையார் கிராமத் தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அருண், அதே பகுதியைச் சேர்ந்த நால்வரால் கொல்லப்பட்டார். குற்ற வாளிகளைத் திருவெண்ணெய் நல்லூர் காவலர்கள் கைது செய்த னர். இக்கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் நால்வரைக் கைது செய்யாத தைக் கண்டித்து உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகை யிட்டனர்.
இந்நிலையில், மாணவன் உட லுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த அமைச்சருக்கு பெற்றோர், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வாக்குவாதம் செய்தனர். இதனால், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
அமைச்சர் பொன்முடி அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மாணவன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.

