கூண்டில் சிக்கிய 300 குரங்குகளை விடுவித்த வனத்துறையினர்

கூண்டில் சிக்கிய 300 குரங்குகளை விடுவித்த வனத்துறையினர்

1 mins read
64808fd9-6e66-4235-a5fb-c51152d7c2a9
-

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப் பாக்கத்தில் உள்ள வெங்கடேசபுரம், ராவுத்தநல்லுார், காந்தி நகர், அப்துல் கலாம் நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் திரிகின்றன. பொது மக்களின் பையைப் பறிப்பது, வீடுகளுக்குள் புகுந்து பொருள்களைச் சேதப்படுத்துவது, சமைத்த உணவுகளைத் துாக்கிச் செல்வது என அவை செய்யும் குறும்புத்தனத்தால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். இந்தக் குரங்குகளின் தொல்லையில் இருந்து காப்பாற்றும்படி பேரூராட்சி நிர்வாகம், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினருக்கு அவர்கள் புகார் மனுக்களை அளித்தனர். இதையடுத்து, குரங்குகளுக்குப் பிடித்தமான வேர்க்கடலை, தேங்காய், வாழைப்பழம், ரொட்டித் துண்டுகள் போன்றவற்றை இரும்புக் கூண்டுக்குள் வைத்து கடந்த இரு நாள்களில் மட்டும் 300 குரங்குகளைப் பிடித்த வனத்துறை யினர், அவற்றைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

படம்: தமிழக ஊடகம்