சென்னை: சென்னையைச் சேர்ந்த சதுரங்க கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, 16, தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
இந்தப் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரக் ஞானந்தா, "மறக்கமுடியாத நாள். ரஜினி மாமாவை எனது குடும்பத்தினருடன் சென்று நேரில் சந்தித்தேன். இவ்வளவு உயரங்களை எட்டியும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது, மகிழ்ச்சி," எனப் பதிவிட்டுள்ளார்.
வரும் 28ஆம் தேதி மாமல்ல புரத்தில் தொடங்க உள்ள சதுரங்க ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் இவரும் பங்கேற்கிறார்.
சதுரங்கத் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் பிரக்ஞானந்தாவை வியந்து பாராட்டிய ரஜினி, அடுத்து நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பி யாட் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார்.

