மதுரை: பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள இப்போதைய பிரிவு அண்ணன்-தம்பிக்கு இடையே அவ்வப்போது ஏற்படும் பிரிவு போன்றதுதான். பன்னீர் செல்வம் மனம் திருந்தி வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்வோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
"அதிமுகவில் காளிமுத்து, ஆர்.எம். வீரப்பன், பண்ருட்டி ராமச் சந்திரன் உள்ளிட்டோர் தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டு திரும்பி வந்தவர்கள்தான். எனவே, பழனிசாமி-பன்னீர்செல்வம் பிரிவும் அண்ணன், தம்பி சண்டை போன் றதுதான். பன்னீர்செல்வம் திருந்தி, திரும்பி வந்தால் நிச்சயம் ஏற்போம்," என்று மதுரையில் செய்தியாளர்களி டம் செல்லூர் ராஜு சொன்னார்.

