சென்னை: அதிமுகவின் இடைக் காலப் பொதுச்செயலாளராக தேர்வான பின்னர், ஐந்து நாள் பயணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றுள்ளார்.
தனது பயணத்தின்போது ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழா, திரௌபதி முர்முவின் பதவி யேற்பு விழாவில் கலந்துகொள்வ துடன் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை யும் சந்தித்து தனக்கான ஆதரவை அவர் கோர உள்ளதாகவும் கட்சி வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல் வத்துக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கட்சியின் சார்பில் நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் எம்.பி.யை கட்சியை விட்டே நீக்குவதையும் நாடாளு மன்றத்தில் அதிமுகவின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம் என கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும் உண்மையான கழகத் தொண்டர்கள் அறிவார்ந்த செய லாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என பழனிசாமியின் நடவடிக்கை யைச் சசிகலா சாடியுள்ளார்.

