இலங்கைக்கு மூன்றாவது முறை பொருளுதவி

இலங்கைக்கு மூன்றாவது முறை பொருளுதவி

2 mins read
b5ddb94a-810d-461b-b57c-f5991ac8c5f0
-

தூத்­துக்­குடி: பொரு­ளா­தார நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள இலங்கை மக்­க­ளுக்கு உத­வும் வகை­யில், 74 கோடி ரூபாய் மதிப்பி­லான அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­கள் தமி­ழக அர­சின் சார்பில் தூத்­துக்­குடி வ.உ.சி. துறை­மு­கத்­தில் இருந்து நேற்று அனுப்பி வைக்­கப்­பட்­டன.

ஏற்­கெ­னவே ெசன்ைன­யில் இருந்து ஒரு கப்­ப­லும் தூத்­துக்­குடி­யில் இருந்து மற்­றொரு கப்­ப­லும் இலங்கை சென்­ற­டைந்­தன.

இந்­நி­லை­யில், தூத்­துக்­கு­டி­யில் இருந்து மூன்றாவது முறையாக 16,800 டன் அள­வி­லான நிவா­ர­ணப் பொருள்­க­ளு­டன் கொழும்பு துறை­மு­கத்­துக்கு கப்பல் புறப்­பட்­டுச் சென்­றது.

இந்­தக் கப்­பலை, தூத்­துக்­குடி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கனி­மொழி கொடியசைத்து அனுப்­பி­வைத்­தார்.

தமி­ழ­கத்­தி­லி­ருந்து 16,500 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவு­டர், 50 டன் உயிர் காக்­கும் மருந்­து­கள் என மொத்­தம் ரூ.74 கோடி மதிப்­பி­லான 16,800 டன் எடை­யுள்ள பொருள்­க­ளு­டன் மூன்­றா­வது கப்­பல் நேற்று புறப்­பட்­டுச் சென்­றது.

சென்னை துறை­மு­கத்­தி­லி­ருந்து கப்­பல் மூலம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி முதல் கட்­ட­மாக ரூ.30 கோடி மதிப்­பி­லான பொருட்­கள் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி தூத்­துக்­குடியில் இ­ருந்து கப்­பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்­பி­லான 15 ஆயி­ரம் டன் எடை­யுள்ள பொருட்­கள் இலங்­கைக்கு அனுப்­பி வைக்கப் பட்டன.

இந்­நி­லை­யில், நேற்று மூன்றாவது கட்­ட­மாக நிவா­ரணப் பொருள்கள் தூத்­துக்­குடியில் இ­ருந்து இலங்­கைக்கு அனுப்பப்­பட்­டன.

இந்த நிகழ்­வில், அமைச்­சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்­தான், பெ.கீதா­ஜீ­வன், அனிதா ராதா­கிருஷ்­ணன் உள்ளிட்டோர் பங்­கேற்­ற­னர்.