விமானத்தில் முதலுதவி சிகிச்சையளித்த ஆளுநர்

விமானத்தில் முதலுதவி சிகிச்சையளித்த ஆளுநர்

1 mins read
fe071016-2942-4d0c-85fd-b7413a44aaa6
-

ஹைதராபாத்: நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் அடைந்த பயணிக்கு தெலுங்கானா முதல்வர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை சுமார் மூன்று மணியளவில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் ஆளுநர் தமிழிசை பயணம் மேற்கொண்டார்.

அதிகாலை நான்கு மணியளவில் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மயக்கம் அடைந்ததாக விமானப் பணிப்பெண் அறிவித்தார். அதைக்கேட்ட ஆளுநர் தமிழிசை, உடனடியாக தன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று, அந்தப் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் அந்தப் பயணியின் அருகிலேயே தானும் அமர்ந்து அவரைக் கண்காணித்தார். சிறிது நேரத்தில் அந்தப் பயணி கண்விழித்த பிறகே, மற்ற பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசையை அனைவரும் பாராட்டினர்.