தமிழகத்துக்கு நூறு கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு

தமிழகத்துக்கு நூறு கோடி கிலோ நிலக்கரி ஒதுக்கீடு

1 mins read
6031e7d3-b5a9-4afa-ba54-f6994df82ca4
-

சென்னை: தமிழகத்தின் மின்தேவையை ஈடுகட்ட ஏதுவாக நூறு கோடி கிலோ நிலக்கரியை ஒதுக்கி உள்ளது மத்திய அரசு.

அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த நிலக்கரியை பயன்படுத்த இயலும் என்றும் ஒடிசாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி தமிழகத்துக்கு வந்து சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அன்றாடத் தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய 7.2 கோடி கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது. இதற்கேற்ப நிலக்கரி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள எட்டு சுரங்கங்களில் இருந்து நூறு கோடி கிலோ நிலக்கரி தமிழகத்துக்கு வழங்கப்பட உள்ளது. தமிழக மின் வாரியத்துக்கு 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின்நிலையங் கள் உள்ளன. மத்திய அரசின் ஒதுக்கீடு காரணமாக நடப்பாண்டில் தமிழக மின்தேவையைச் சமாளிக்க தனியாரிடம் தமிழக அரசு நிலக்கரி வாங்க வேண்டிய அவசியம் எழாது எனத் தெரிகிறது.