கஞ்சா வியாபாரிகளின் ரூ.8.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

கஞ்சா வியாபாரிகளின் ரூ.8.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

1 mins read
b65d74b9-0788-4c8c-9104-a906dc3b446b
-

மதுரை: மது­ரை­யைச் சேர்ந்த கஞ்சா வியா­பா­ரி­க­ளி­ன் 8.18 கோடி ரூபாய் மதிப்­புள்ள சொத்­து­கள் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­வட்ட காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் சிவ­பி­ர­சாத் தெரி­வித்­துள்­ளார்.

நான்கு கஞ்சா வியா­பா­ரி­க­ளி­டம் இருந்து 559 கிலோ கஞ்சா பறிமுதல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­உள்­ளார்.

"இது­வரை 15 வழக்­கு­களில் சொத்­து­கள் முடக்கி வைக்­கப்­பட்­டுள்­ளன. பினாமி பெயர்­களில் சொத்­து­கள் இருந்­தா­லும் முடக்­கப்­படும். மேலும், 249 வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

"மதுரை உட்­பட தமி­ழ­கத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்­திரா - ஒடிசா எல்லை­யில் நிலங்­களை குத்தகைக்கு எடுத்து கஞ்சா பயிரி­டு­கின்­ற­னர். இவர்­கள் மூல­மும் தமி­ழ­கத்­தில் கஞ்சா ஊடு­ரு­வு­கிறது. இதைத் தடுக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றோம்," என்­­றார் சிவபிரசாத்.