சென்னை: "என் சாவுக்கு மாமியார்தான் காரணம். நானும் பாப்பாவும் செல்கிறோம்," என்று 'வாட்ஸ்அப்' செயலியில் தன் அக்காவிற்கு குரல் பதிவை அனுப்பிவிட்டு திருமணமான ஐந்தே மாதத்தில் 4 மாத கர்ப்பி ணிப் பெண் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
வேளச்சேரி காவல்துறையினர், உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மகள் இந்துமதியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு காவலர்கள் பரிந் துரை செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் இந்துமதி, 25. கடந்த பிப்ரவரி மாதம் தியாகராய நகரைச் சேர்ந்த குமரன், 37, என்பவரை பெற்றோர் சம்மதத் துடன் திருமணம் செய்துள்ளார்.
திருமணமான நாள் முதலே இந்து மதியை அவரது மாமியார் சாந்தி, "ராசியில்லாதவள், அதிகம் படிக்க வில்லை. குறைவாக சாப்பிடு," என திட்டி வந்துள்ளார். மாமி யாரின் துன்புறுத்தலால் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த இந்து மதியைக் கணவரும் திருப்பி அழைத்துச்செல்லவில்லை.
கணவர், மாமியாருடன் இந்துமதி. படம்: ஊடகம்

