பள்ளி விடுதியில் மற்றொரு 'பிளஸ் 2' மாணவி உயிரிழப்பு

பள்ளி விடுதியில் மற்றொரு 'பிளஸ் 2' மாணவி உயிரிழப்பு

1 mins read
c1e9232d-3b27-4125-94c6-099576b90568
கனி­யா­மூர் தனியார் ­பள்­ளி­யில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி இம்­மா­தம் 13ஆம் தேதி சந்­தே­கப்­படும் வகை­யில் உயி­ரி­ழந்­தார். இந்த சோகம் நீங்­கு­வ­தற்­குள் சரளா (உள்படம்) இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சரளா இறப்பில் சந்தேகம் உள்ளதாக மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். படம்: ஊடகம் -

திரு­வள்­ளூர்: திரு­வள்­ளூர் அருகே பள்ளி விடு­தி­யில் மற்­றொரு 'பிளஸ் 2' மாணவி உயிரை மாய்த்­துக் கொண்டுள்ள நிலை­யில், அங்­கிருந்த மற்ற விடுதி மாணவிகள் அவர்­க­ளது பெற்­றோ­ரு­டன் வீட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

இத­னால், மப்பேடு காவல்துறை யினரும் மாவட்டக் காவல்துறை யினரும் அப்பகுதியில் குவிக்கப் பட்டுள்ளதால் கீழச்சேரி பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

திரு­வள்­ளூர் அருகே உள்ள கீழச்­சே­ரி­யில் அரசு நிதி உதவி பெறும் மக­ளிர் மேல்­நி­லைப்­பள்ளி உள்­ளது.

திருத்­தணி அருகே உள்ள தக்­க­ளூர் கிரா­மத்­தைச் சேர்ந்தவர் விவ­சாயி பூச­னம்-முரு­கம்­மாள் தம்­ப­தி­யின் ஒரே மகள் சரளா, 17.

சரளா, அரசு நிதி உதவி பெறும் புனித இரு­தய மக­ளிர் மேல்நிலைப்­பள்­ளி­யின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை வழக்­கம்போல் பள்­ளிக்­குச் செல்ல சீருடை அணிந்து தோழி­க­ளு­டன் பேசிக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், சக தோழி­கள் உணவு சாப்பிடச் சென்றுவிட, தனி­யாக இருந்த சரளா துாக்கிட்டு உயிரை மாய்த்­துக்கொண்­டார். இத­னால் பள்ளிக்கு நேற்று விடு­முறை விடப்­பட்டது.

திரு­வள்­ளூர் காவல்­து­றை யி­னர் சரளாவின் சட­லத்தை மீட்டு உடற்­கூ­ராய்­வுக்­காக திரு­வள்­ளூர் அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­த­னர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் முறை யாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி மாணவியின் உறவி னர்கள் கீழச்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சரளாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.