ஆகஸ்ட் 1 முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த 77 உத்தரவுகள்

ஆகஸ்ட் 1 முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த 77 உத்தரவுகள்

2 mins read
c2b659cd-2063-4e75-aa01-63e6a5d95cdf
-

சென்னை: வகுப்­ப­றை­களில் ஆசி­ரி­யர்­கள் கைபே­சி­யைப் பயன்­ப­டுத்­தக் கூடாது, மாணவர்­க­ளின் மனம் நோகும் வகை­யில் எந்த தண்­ட­னை­யும் வழங்­கக்­கூ­டாது என்­பன உள்­ளிட்ட 77 வகை­யான உத்­த­ர­வு­களை ஆசிரியர்­க­ளுக்கு பள்­ளிக் கல்­வித்­துறை பிறப்­பித்­துள்­ளது.

தமி­ழ­கப் பள்­ளி­களில் இடம் பெறும் அனைத்து நிகழ்­வு­க­ளுக்­கும் தலைமை ஆசி­ரி­யரே பொறுப்­பேற்கவேண்­டும் என்றும் மாண­வர்­களின் பாதுகாப்­புக்­கும் தலைமை ஆசிரியரே உத்­த­ர­வா­தம் அளிக்க வேண்­டும் எனவும் கல்­வித்­துறை வலியுறுத்தி உள்ளது.

அண்ைம­யில், கனியாமூர் தனி­யார் பள்­ளி­யில் ஸ்ரீமதி, 17, என்ற மாணவி தனது உயிரை மாய்த்­துக் கொண்­டார்.

இந்­தச் சம்­ப­வத்­தின் எதி­ரொலி யாக தமி­ழ­கத்­தில் உள்ள அனைத் துப் பள்­ளி­க­ளுக்­கும் 77 வழி­காட்டி நெறி­மு­றை­கள் பறந்­துள்­ளன.

இதன்­படி, தலைமை ஆசிரியர்­கள், முது­நிலை ஆசி­ரி­யர்­கள் உள்­பட அனைத்து ஆசி­ரி­யர்­களும் பள்ளி தொடங்­கு­வ­தற்கு முன் பாகவே பள்­ளிக்கு வர­வேண்­டும்.

பள்­ளி­யில் மாண­வர்­கள் சண்டை யிட்­டுக்­கொள்­வது, சாலை விபத்து உள்­ளிட்ட எந்த ஒரு சம்­ப­வம் நடந்­தா­லும் உட­ன­டி­யாக முதன்மைக் கல்வி அலு­வ­ல­ருக்­குத் தெரி­யப் படுத்­த­வேண்­டும்.

குடி­நீர், கழி­வறை, ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை போன்­ற­வற்றை அனு­மதி பெறா­மல் ஊட­கங்­க­ளுக்­குத் தெரிவிக்­கக்கூடாது.

பேருந்­தில் வரும் மாண­வர்­கள் மேற்­கூை­ர­யில் அமர்ந்து வரு­வ­தைத் தவிர்க்க இறை வணக்­கக் கூட் டத்­தின்­போது தக்க அறி­வு­ரை­களை வழங்­க­வேண்­டும்.

வகுப்­பறை பற்­றாக்­குறை காரண மாகவோ அல்­லது இதர கார­ணங் களுக்­கா­கவோ மரத்­த­டி­யில் பாடம் நடத்­தக்­கூ­டாது.

மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் மதிய சத்­து­ணவை தலைமை ஆசி­ரி­யர் ஆய்வு செய்து தரத்­தை­யும் சுகா­தா­ரத்­தை­யும் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

அனைத்து தலைமை ஆசிரி யர்­களும் தின­மும் ஒரு மணி நேரத்­துக்கு ஒரு­முறை தங்­க­ளுக்கு வரும் மின்­னஞ்­சலை திறந்து பார்த்து அவற்­றுக்கு உரிய நடவடிக்கை எடுக்­க­வேண்­டும்.

ஆசி­ரி­யர்­கள் வகுப்­பறையில் கைபே­சி­யில் பேசி­னால் ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்கவேண்­டும்.

மாண­வர்­களை எக்காரணம் கொண்­டும் ஆசி­ரி­யர்­கள் தங்­க­ளது சொந்த வேலை­யைச் செய்­யும்­படி பணிக்­கக்கூடாது.

மதிய உணவு இடை­வே­ளைக் குப் பிறகு கட்­டா­யம் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் வாய்ப்­பாடு பயிற்சி அளிக்­க­வேண்­டும்.

பழு­தான கட்­ட­டத்­தில் மாண வர்­களை அம­ர­வைக்­கக்கூடாது என்­பன உள்­ளிட்ட வழி­காட்டி நெறி­மு­றை­களை வெளி­யிட்­டுள்ள தமி­ழக அரசு, பள்­ளி­களில் நடைெபறும் எல்லா நிகழ்­வு­க­ளுக்­கும் தலைமை ஆசி­ரியரே பொறுப்­பேற்கவேண்­டும் என அறி­வு­றுத்தி உள்­ளது.

இத­னி­டையே, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரி யர்­க­ளின் வரு­கை பதிவு செய்யப்பட உள்­ள­தாக பள்­ளிக் கல்­வித் துறை அறி­வித்­துள்­ளது. காலை 10 மணிக்­குள் செய­லி­யில் வருகையைப் பதிவு செய்­ய­வில்லை எனில், சம்­ப­ளம் பிடித்­தம் செய்­யப்­படும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்­கம்­பாக்­கம் ஆண்­கள் பள்­ளி­யில் படிக்­கும் பிளஸ் 1 மாண­வர்­க­ளுக்கு விலை­யில்லா மிதிவண்டிகள் வழங்­கும் திட்­டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டா­லின் தொடக்கி வைத்தார். தமி­ழ­கத்­தில் ஏறக்குறைய 6 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு மிதி­வண்­டி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.