கோவை: அரவணைப்பார் யாரும் இன்றி கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அனாதை களாக சுற்றித் திரிந்தவர்களை அழைத்துவந்து, தொண்டா முத்தூரில் உள்ள ஒரு காப்பகம் சிறிய அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, பாஜக, இந்து முன்னணியினர், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் காப்ப கத்துக்குச் சென்று பார்த்தபோது ஒரு சிறிய அறையில் 131 பேர் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காப்பக ஊழியர் களிடம் வாக்குவாதம் செய்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் வாகனத்தைக் கவிழ்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூரை அடுத்த கெம்பனூர் அட்டுக்கல் என்ற இடத்தில் இயங்கி வந்த இந்தக் காப்பகம் பல்வேறு முறைகேடுகள் காரணமாக ஏற்கெனவே வருவாய்த் துறையினரால் 'சீல்' வைக்கப்பட்ட காப்பகமாகும்.
இந்நிலையில், கடந்த சில தினங் களாக சாலை ஓரங்களில் சுற்றித் திரிந்தவர்கள், மனநலம் பாதிக்கப் பட்டவர்கள், ஆதரவற்றவர்களைக் காப்பக ஊழியர்கள் வாகனங்களில் கடத்திக்கொண்டு வந்து சிறிய அறையில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
தொண்டாமுத்தூர் காவல்நிலைய காவலர்கள் அங்கு அடைத்து வைத்தவர்களிடம் நடத்திய விசா ரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
சாலையில் படுத்துத் தூங்கிய பணியாளர்கள், பேருந்து, ரயி லுக்காக காத்திருந்த முதியவர்கள் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி வந்து அறை யில் அடைத்து வைத்ததாக கூறி யுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல்துறை எஸ்.பி பத்ரி நாராயணன், வட்டாட்சியர் காந்தி மதி உள்ளிட்டோர் சம்பவ இடத் திற்குச் சென்று விசாரனை நடத்தி, 131 பேரை விடுவித்தனர். அவர்களில் மனநலம் குன்றியவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்த னர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காப்பக ஊழியர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

