விமான நிலையத்தில் கண்ணாடி மின்தூக்கி வசதி

விமான நிலையத்தில் கண்ணாடி மின்தூக்கி வசதி

1 mins read
beea2035-d4e1-4036-b9ae-2250f6018843
-

சென்னை: சென்னை மீனம்பாக்­கம் அைனத்­து­லக விமான நிலை­யத்­தில் கண்­ணாடியைக்­கொண்டு தயா­ரிக்­கப்பட்­டுள்ள இரண்டு புதிய நவீன மின்­தூக்­கி­கள் செயல்­பாட்­டுக்கு வந்­துள்­ளன.

இவை உள்­நாட்டு, அனைத்­து­லக விமா­னப் பயணிகள், மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மட்டுமன்றி, இயங்­கும் படிக்­கட்டு­களில் செல்ல சிர­மப்­ப­டு­ப­வர்­ களுக்­கும் ஊனமுற்­ற­வர்­க­ளுக்­கும் பேருதவி­யாக இருக்­கும்.

இந்த மின்­தூக்­கி­க­ளின் உள்ளேயி­ருந்­தும் வெளியேயிருந்­தும் பார்க்­க­மு­டி­யும் என்­ப­தால் பய­ணி­க­ளின் பாது­காப்­பும் உறுதி செய்­யப்­ப­டு­வ­தா­க­ அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

ஒவ்­வொரு மின்­தூக்­கி­யும் தலா 20 பேரை தூக்­கிச்­செல்­லும் திறன் படைத்­த­தா­க­வும் 360 டிகிரி கோணத்­தில் உள்­ளே­யி­ருந்து விமா­ன­நி­லை­யத்தைப் பார்க்­கும் வகை­யி­லும் கண்­ணா­டி­யால் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

மின்தூக்­கி­களைச் சென்னை விமான நிலைய இயக்கு­நர் சரத்­கு­மார் மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்­கி­வைத்­தார்.