ரூ.4,800 கோடி முறைகேடு வழக்கு: நெருக்கடியில் இபிஎஸ்

ரூ.4,800 கோடி முறைகேடு வழக்கு: நெருக்கடியில் இபிஎஸ்

2 mins read
731cb432-86b8-4866-9d0c-84d1a02c00c9
-

சென்னை: முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி மீதான ரூ.4,800 கோடி நெடுஞ்­சாலை ஒப்­பந்த முறை­கேடு வழக்கு உச்ச நீதி­மன்­றத் தலைமை நீதி­பதி என்.வி.ரமணா அமர்­வின் முன்பு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

அப்­போது, மனு­தா­ரர் ஆர்.எஸ். பாரதி தரப்­பில் அவ­கா­சம் கோரப் பட்­ட­தைத் தொடர்ந்து, இவ்­வ­ழக்கு விசா­ர­ணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்­தி­வைப்­ப­தாக நீதி மன்­றம் உத்­த­ர­விட்­டது.

ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பின்­னர் கடந்த 2017 முதல் 2021 வரை முதல்­வ­ராக இருந்­தார் பழ­னி­சாமி.

இந்த காலகட்­டத்­தில் ரூ.4,800 கோடி மதிப்­புள்ள ஒப்­பந்­தங்­களை நெருங்­கிய உற­வி­னர்­கள், நண்­பர் களுக்கு அவர் வழங்­கி­ய­தாக திமுக குற்­றஞ்­சாட்­டி­யது. இது­கு­றித்து, உயர் நீதி­மன்­றத்­தில் ஆர்.எஸ்.பாரதி வழக்­குத் தொடர்ந்­தார்.

கடந்த 2018ல் இந்த வழக்கை விசா­ரித்த உயர் நீதி­மன்­றம், முதல்­வராக இருந்த பழ­னி­சாமி மீதான குற்­றச்­சாட்­டில் முகாந்­தி­ரம் இருப்­ப­தா­கக் கூறி சிபிஐ விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்­டது.

இதை எதிர்த்து, உச்ச நீதி­மன்­றத்­தில் பழ­னி­சாமி மேல்­மு­றை­யீடு செய்­தார்.

இவ்­வ­ழக்கை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம் சிபிஐ விசா­ர­ணைக்கு இடைக்­கா­லத் தடை விதித்­தது.

அதன்­பி­றகு, நான்கு ஆண்­டு­களாக இவ்­வ­ழக்கு நிலு­வை­யில் இருந்­து­வந்­தது.

இந்­நி­லை­யில், இவ்­வ­ழக்கை விரைந்து விசா­ரிக்­கும்­படி தலைமை நீதி­பதி என்.வி.ரமணா அமர்­வில் தமி­ழக அரசு தரப்­பில் நேற்று முன்­தி­னம் முறை­யி­டப்­பட்­டது.

இதை­ய­டுத்து, பழ­னி­சாமி மீதான முறை­கேடு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­த­போது, ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு நீதி­மன்­றம் விசா ரணையை ஒத்­தி­வைத்­தது.

பழ­னி­சாமி மீதான ஒப்பந்த முறை­கேடு வழக்கு, கோட­நாடு கொலை, கொள்ளை வழக்கு ஆகி யன மீண்­டும் வேகம் எடுக்­கத் தொடங்கி உள்­ள­தால், அதி­மு­க­வின் இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கப் பொறுப்­பேற்­றுள்ள அவ­ருக்கு நெருக்­கடி அதி­க­ரித்­துள்­ளது.

இத­னி­டையே, கடந்த 11ஆம் தேதி நடந்த அதி­முக பொதுக்­குழு­வில் சட்­ட­வி­தி­கள் மீறப்­பட்­டுள்­ள­தா­க­வும் பழ­னி­சாமி இடைக்­கா­லப் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்­டதை ரத்து செய்­யக் கோரி­யும் ஓ பன்­னீர்­செல்­வம் தொடர்ந்த மேல் முறை­யீட்டு வழக்கு, உச்ச நீதி­மன்­றத்­தில் நாளை வியா­ழக்­கி­ழமை விசா­ரணைக்கு வர­வுள்­ள­தால் பழ­னி­சாமிக்கு நெருக்­கடி அதி­க­ரித்­துள்­ள­தாக தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.