புதுமணத் தம்பதியைக் கொன்ற பெண்ணின் தந்தை கைது

புதுமணத் தம்பதியைக் கொன்ற பெண்ணின் தந்தை கைது

2 mins read
8ea2dbb9-1047-42de-8c03-92c9af9eb20a
ரேஷ்மாவுடன் மாணிக்கராஜ். படம்: தமிழக ஊடகம் -

எட்­ட­ய­பு­ரம்: தன் மகள், மரு­ம­க­ன் என்றும் பாராமல், திரு­ம­ண­மான ஒரு மாதத்­துக்­குள் புதுமணத் தம்பதியைக் கொன்­று­விட்டு தலை­மறை­வான பெண்­ணின் தந்­தையை நேற்று எட்டயபுரம் காவ­லர்­கள் கைது செய்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தூத்­துக்­குடி மாவட்­டம், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்­பட்டி கிரா­மத்­தில் நடந்­துள்­ளது.

வீரப்­பட்டி கிரா­மத்­தைச் சேர்ந்­த விவசாயியான முத்­து­க்குட்டி, 50, சொந்­தமாக வேன், சிறிய ரக லாரி களை வைத்துக்கொண்டு, அவற்றை வாட­கைக்கு விட்டு சம்பாதித்து வரு­கி­றார்.

இவ­ரு­டைய மகள் ரேஷ்மா, 20, கோவில்­பட்­டி­யில் உள்ள கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்.

இவர்­க­ளது எதிர் வீட்டில் வசித்து வந்த வடி­வேல் மகன் மாணிக்­க­ராஜ், 26, என்பவரை ரேஷ்மா காதலித்துள்ளார்.

உறவினர்களான ரேஷ்மா-மாணிக்­க­ராஜின் காதல் விவ­கா­ரம் வெளியில் தெரியவர, பெண்ணின் தந்தை முத்துக்குட்டி இதற்கு கடும் எதிர்ப்பு தெரி­வித்துள்ளார்.

அவசர அவசரமாக தனது மக­ளுக்கு மற்­றொரு வரனைப் பார்த்து திரு­மண நிச்சயதார்த்தம் செய்­த­தாகவும் கூறப்­ப­டு­கிறது.

இந்நிலை­யில், கடந்த மாதம் 29ஆம் தேதி காத­லர்­கள் இரு­வரும் யாரிடமும் ெசால்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு வெளி­யேறி­ உள்ளனர்.

மது­ரை­யில் உள்ள உற­வி­னர் வீட்­டுக்குச் சென்று திரு­ம­ணம் செய்துகொண்­ட­னர்.

பின்­னர் அங்­கேயே தங்­கி­யிருந்தவர்கள், சொந்த ஊரான வீரப்­பட்டி கிரா­மத்­துக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு திரும்பினர்.

கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த மாணிக்­க­ரா­ஜின் வீட்டில் உள்ள அனைவரும் நேற்று முன் தினம் காலை வேலை நிமித்தம் வெளியே சென்றுவிட்டனர். புது­மணத் தம்­ப­தி­யர் மட்­டும் வீட்­டில் இருந்­துள்ள­னர். மாலை நேரத்தில் மாணிக்­க­ராஜின் தாய் மகா­லட்­சுமி வீட்­டுக்குத் திரும்பி வந்­த­போது மகனும் மரு­ம­களும் ரத்த வெள்­ளத்­தில் கிடந்ததைக் கண்டு கதறி னார். எட்­ட­ய­பு­ரம் காவல்துறையின ருக்குத் தக­வல் கூறப்பட்டது.

காதல் திருமணத்தை விரும்பாத தால் திருமணமான 26 நாளில் புதுமணத் தம்பதியைக் கொன்று விட்டு கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கைது செய்யப்பட்டார்.