கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே கபடிப் போட்டியில் கலந்துகொண்டு சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த கபடி வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த நண்பனைக் கண்டு சக நண்பர்கள் கதறி அழுதனர்.
போட்டியில் உயிரிழந்த மாண வனின் உடல் அவரது கோப்பை களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் கபடி வீரர் விமல்ராஜ், 22. சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்துவந்த இவர், மானடிக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த கபடிப் போட்டியில் சுறுசுறுப்பாக விளை யாடிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரணியின் வீரர் ஒருவர் விமல்ராஜை மடக்கிப் பிடித்தபோது அந்த வீரரின் இரு முழங்கால்களும் விமல்ராஜ் மார் பின்மீது அழுத்தமாகப் பதிந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விமல்ராஜால் எழுந்து நடக்கமுடியாமல் கீழே விழுந்தார். அவர் மீண்டும் எழ முயன்றபோது, முடியாமல் மயங்கி விழுந்தார். சக கபடி வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் உயிரிழந்து விட்டதாகக் கூறினர். முத்தாண் டிக்குப்பம் காவலர்கள் விமல்ராஜ் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை ெதாடர்கிறது.

