பேருந்தை ஆட்டோ ஓட்டுநர் ஓட்டுவதற்கு அனுமதித்த ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்

பேருந்தை ஆட்டோ ஓட்டுநர் ஓட்டுவதற்கு அனுமதித்த ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்

1 mins read
3bcf083c-1ff0-424c-ac43-ce4723afe1bf
ஏறக்குறைய 7 கி.மீ. தூரம் வரை பேருந்தை கைலியுடன் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் சரவணன். படம்: ஊடகம் -

தேனி: அரசுப் பேருந்தை ஓட்டுவதற்கு பேருந்து ஓட்டு நரின் நண்பர் ஒருவர் ஆசைப் பட, அவரது ஆசையை நிறை வேற்றி வைத்த ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஓட்டுநராகப் பாண்டி விஸ்வநாதனும் நடத்துநராக வினோத்குமாரும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தேனி-வீரபாண்டி பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது வீரபாண்டியில் பேருந்து ஓட்டுநரின் நண்பரான ஆட்டோ ஓட்டுநரான சரவணன் என்பவர் கைலி அணிந்து கொண்டு பேருந்தில் ஏறியுள்ளார்.

தான் பேருந்தை ஓட்ட விரும்பு வதாக தனது ஆசையை அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஓட்டுநர் பாண்டி விஸ்வநாதனின் ஒப்புதலுடன் சர வணன் கைலியுடன் சுமார் 7 கி.மீ. தூரம் வரை பேருந்தை ஓட்டி மகிழ்ச்சியடைந்தார்.

இதனைப் பேருந்தில் இருந்த ஒருவர் காணொளியாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளி யிட்டார்.

இதனையடுத்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பாண்டி விஸ்வநாதன், நடத்துநர் வினோத்குமார் ஆகி யோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.