மாணவியின் உடல் ஒப்படைப்பு

மாணவியின் உடல் ஒப்படைப்பு

1 mins read
275c9874-6ec1-4be4-a04a-299232794686
-

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள பள்ளி விடுதியில் நேற்று முன்தினம் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயது 'பிளஸ் 2' மாணவி சரளாவின் உடல், உடல் கூராய்வுக்குப் பிறகு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மாணவியின் உடல் பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்பட்டது.

காவலர்கள் பாதுகாப்புடன் மாணவியின் உடல் சொந்த ஊரான திருத்தணியை அடுத்த தெக்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.