சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்குத் திடீரென லேசான மயக்கம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது வெயிலில் ஒரு மணி நேரம் நின்றபடி தொடர்ந்து பேசியதால் எடப்பாடி பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவருக்குத் தண்ணீர் கொடுத்து மேடையில் அதிமுகவினர் அமர வைத்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார்.

