சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆவணங்கள், பொருள்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று உள்துறை செயலரிடம், காவல்துறையிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக அலுவலக ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் விரைவில் அவற்றை காவல்துறை கைப்பற்றும் என்றும் நேற்று ஊடகங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

