மாணவருக்கு 800 மருத்துவர்கள் உதவும் தன்னம்பிக்கைத் திட்டம்

மாணவருக்கு 800 மருத்துவர்கள் உதவும் தன்னம்பிக்கைத் திட்டம்

1 mins read
1ddedd8c-afaf-405a-8401-3e36f496d894
-

திருப்­பூர்: தமிழ்­நாட்­டில் பள்­ளிக்­கூட மாண­வர்­க­ளுக்குத் தன்­னம்­பிக்கையை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பெரி­ய­ள­வில் ஆலோ­சனை சேவை திட்­டம் விரை­வில் தொடக்­க­விருப்­ப­தாக அந்த மாநில பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் மகேஷ் பொய்­யா­மொழி தெரி­வித்­தார்.

அந்­தத் திட்­டத்­தின் கீழ், மாநிலத்­தின் ஒவ்­வோர் ஒன்­றி­யத்துக்­கும் இரண்டு மருத்­து­வர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­கள்.

அவர்­கள் மாண­வர்­க­ளுக்குப் பல வழி­க­ளி­லும் ஆலோ­சனை கூறி தன்­னம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­வார்­கள் என்று திருப்­பூ­ரில் அளித்த பேட்­டி­யில் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அத்­திட்­டத்­தின்­படி, மாநி­லத்­தின் கல்வி ஒன்­றி­யம் 413 பகு­தி­க­ளாக பிரிக்­கப்­படும். ஒவ்­வோர் ஒன்­றி­யத்­துக்­கும் நிய­மிக்­கப்­படும் மருத்­து­வர்­கள், தங்­கள் பகு­தி­களில் உள்ள பள்­ளிக்­கூ­டங்­க­ளுக்­குச் சென்று மாண­வர்­க­ளுக்கு ஆலோ­சனை கூறி உத­வு­வார்­கள்.

திட்­டத்­தில் மொத்­தம் 800 மருத்­து­வர்­கள் உட்­ப­டுத்­தப்­படு­வார்­கள் என்றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

தமிழ்­நாட்­டில் மாண­வர்­கள் மனமு­டைந்து உயிர்­மாய்ப்பு காரி­யங்­களில் ஈடு­படும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் சூழ­லில் அமைச்­ச­ரின் இந்த அறி­விப்பு இடம்­பெ­று­கிறது.

அண்­மைய நாள்­களில் மாநி­லத்­தில் மொத்­தம் ஐந்து மாண­வர்­கள் மன­உ­ளைச்­சல் கார­ண­மாக தங்­களைத் தாங்­களே மாய்த்துக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், மாண­வர்­க­ளி­டம் தன்­னம்­பிக்­கை­யைப் பலப்­ப­டுத்­தும் மற்­றொரு முயற்­சி­யாக, மாண­வர்­களி­டம் உள்ள விளை­யாட்டுத் திறமை­க­ளைக் கண்­ட­றிந்து, அவர்­களுக்கு நாட்­ட­மான திற­மை­களில் பயிற்சி அளித்து, தேசிய அள­விலான விளை­யாட்டுப் போட்­டி­களில் அவர்கள் பங்­கேற்க உத­வும் திட்­டம் கட்­டம் கட்­ட­மாக நடப்­புக்கு வரு­கிறது என்­றும் பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.