ஈரோட்டில் கைதான இளையர்களுக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு

ஈரோட்டில் கைதான இளையர்களுக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு

1 mins read
db669701-20d0-4fbb-bd19-047049d009e2
-

ஈரோடு: தீவி­ர­வாத தொடர்பு இருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின் பேரில் ஈரோட்­டைச் சேர்ந்த இரண்டு இளை­யர்­க­ளி­டம் தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை நடத்தி முடித்­துள்ள நிலை­யில் இரு­வர் மீதும் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின் வழக்­குப்­ப­தி­வாகி உள்­ளது.

ஆசிப் முசாப்­தீன், யாசின் என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள இரு­வ­ருக்­கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

ஈரோடு மாவட்­டம், மாணிக்­கம்­பா­ளை­யம் பகு­தி­யில் அண்­மை­யில் அதி­கா­ரி­கள் திடீர் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அங்­குள்ள ஒரு வீட்­டில் இருந்­த­வர்­கள் விசா­ரிக்­கப்­பட்­ட­னர்.

உள்­ளூர் காவல்­து­றை­யின் பாது­காப்­பு­டன் நடை­பெற்ற இந்த விசா­ரணை நள்­ளி­ரவு வரை நீடித்­தது. அதன் முடி­வில் அந்த வீட்­டைச் சேர்ந்த இளை­யர் ஒரு­வர் மட்­டும் விசா­ர­ணைக்­காக அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

மேலும் அவர் கொடுத்த தக­வ­லின் பேரில், அதே­ப­கு­தி­யைச் சேர்ந்த அவ­ரது நண்­ப­ரான இன்­னொரு இளை­ய­ரும் சிக்­கி­னார்.

மேலும் மாணிக்­கம்­பா­ளை­யத்­தில் உள்ள இளை­ஞ­ரின் குடும்­பத்­தார் வசித்து வரும் பகு­தி­யில் ஈரோடு காவல்­துறை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அந்த இளை­ய­ரைத் தேடி யாரெல்­லாம் வந்து சென்­ற­னர், அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­கள் என்ன என்­பன குறித்­தும் விசா­ரணை நடை­பெற்று வந்­தது.

இந்­நி­லை­யில், இரு­வர் மீதும் பாது­காப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்குப் பாயந்­துள்­ளது.

எனி­னும் இரு­வ­ரி­ட­மும் விசா­ரணை நீடித்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.