சீமைக்கருவேல மரங்களை அகற்ற சீமான் வலியுறுத்து

சீமைக்கருவேல மரங்களை அகற்ற சீமான் வலியுறுத்து

2 mins read
9f5c105c-cd21-4d95-8bcc-e82e31bef444
-

சென்னை: மரங்­க­ளின் பண்­பு­களுக்கு நேர்­மா­றா­னக் குணங்­க­ளைக் கொண்­டுள்ள யூக­லிப்­டஸ் மரம், சீமைக்­க­ரு­வேல மரம் போன்ற அந்­நிய மரங்­களை தமி­ழக மண்­ணி­லி­ருந்து அகற்ற வேண்­டி­யது பேர­வ­சி­ய­மா­கிறது என நாம் தமிழர் கட்­சி­யின் தலைமை ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான சீமான் வலி­யு­றுத்தி உள்­ளார்.

கேரள மாநி­லத்­தில் வளம் கொழிப்­ப­தற்­கும் இயற்­கை­யின் பசுஞ்­சோ­லை­யா­கக் காட்­சி­ய­ளிப்­பதற்­கும் அம்­மா­நி­லத்தை ஆளும் அர­சு­க­ளின் இயற்கை நலன் குறித்­தா­னப் பெருத்த அக்­க­றையே முதன்­மைக் கார­ணம் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், மேலை நாடு­களில், மரங்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்­கென்றே 'மர மருத்­து­வர்­கள்' எனும் ஒரு பிரிவை உரு­வாக்கி வைத்­தி­ருப்­பதா­கச் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

நிலத்­தடி நீர் வளத்தை உறிஞ்சி, காற்­றி­லுள்ள நீர்ச்­சத்­தை­யும் உறிஞ்சி, வறட்­சியை ஏற்­ப­டுத்­தும் தன்மை கொண்ட மரங்­க­ளின் பேயான சீமைக்­க­ரு­வேல மர­மும் சமூ­க­ந­லக்­கா­டு­கள் எனும் பெய­ரில் திணிக்­கப்­பட்ட யூக­லிப்­டஸ் மர­மும் நில வளத்­தை­யும், நீர் வளத்­தை­யும் முற்­றா­கப் பாதிப்­ப­தாக அறிக்கை ஒன்­றில் சீமான் குறிப்­பிட்­டுள்­ளார்.

"வர்தா புயல் தாக்­கு­த­லின்­போது சென்­னை­யி­லுள்ள பெரு­வா­ரி­யான மரங்­கள் முறிந்து விழுந்­த­தற்­குக் கார­ண­மும் அவை இம்­மண்­ணுக்­குத் தொடர்­பற்ற அந்­நிய மரங்­கள் என்­ப­தே­யா­கும்.

"இம்­மண்­ணுக்­கேற்ற மரங்­களை நட்டு வளர்க்­கும்­போ­து­தான் பெருங்­காற்றை எதிர்­கொண்­டா­லும் அதைத் தாங்­கும் திற­னைக்­கொண்டு அவை நிலைத்து நிற்­கின்­றன.

"அண்டை மாநி­ல­மான கேர­ளா­வில் மரங்­கள் குறித்­தான விழிப்­பு­ணர்வை மக்­க­ளி­டம் ஏற்­ப­டுத்தி, சீமைக்­க­ரு­வேல மரங்­களை மொத்­த­மாக அகற்றி, மண்­ணுக்­கேற்ற மரங்­க­ளையே நட்டு வளர்க்­கி­றார்­கள்," என்று சீமான் தெரி­வித்­துள்­ளார்.

நில வளம், நீர் வளம், மலை வளம், கடல் வளம், கனிம வளம் என இயற்­கை­யின் சொத்­துக்­களை சூறை­யா­டித் தின்­ப­தை­ நோக்­க­மா­கக் கொண்ட தமி­ழக ஆட்­சி­யா­ளர்­கள் அது­கு­றித்த எந்­தக்­க­வ­லை­யும் அக்­க­றை­யும் கொண்­டி­ருப்­ப­தா­கத் தமக்­குத் தெரி­ய­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், அந்­நிய மரங்­களை அகற்ற உயர் நீதி­மன்­றம் தற்­போது உத்­த­ர­விட்­டி­ருப்­பதை நாம் தமி­ழர் கட்சி வர­வேற்­ப­தா­கக் கூறி­உள்­ளார்.