சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேலும், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர் என்றே பதவியே இல்லை என்றும் பொதுக்குழு தொடர்பாக ஏதாவது உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால் அது தொடர்பாக எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இப்போது உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

