நடனக் கலைஞர்கள் நால்வருக்கு தொற்றுப்பாதிப்பு

நடனக் கலைஞர்கள் நால்வருக்கு தொற்றுப்பாதிப்பு

1 mins read
f8978d47-33d8-424c-a0c5-ee05f46530e5
-

சென்னை: சது­ரங்க ஒலிம்­பி­யாட் தொடக்க விழா­வில் பங்­கேற்க இருந்த நான்கு நட­னக் கலை­ஞர்­கள் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவ்விழாவுக்கான கலை நிகழ்ச்­சி­களில் சுமார் 900 கலை­ஞர்­கள் பங்­கேற்க இருந்தனர். இந்­திய பண்­பாட்­டை­யும் கலாச்­சா­ரத்­தை­யும் பிர­தி­ப­லிக்­கும் கலை நிகழ்ச்­சி­களை நடத்த ஏற்­பா­டாகி இருந்­தது. இந்­நி­லை­யில் கலை­நி­கழ்ச்­சி­களில் பங்­கேற்க இருந்த கலை­ஞர்­கள் அனை­வ­ருக்­கும் கொரோனா பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது. இதில், நான்கு நடன கலை­ஞர்­க­ளுக்கு தொற்று இருப்­பது உறுதியானது.